கல்பிட்டி பிரதேச வளங்கள் சுரண்டப்படுமாயின் கல்பிட்டி மக்களின் சக்தியை நாளை பாதையிலே கண்டுகொள்ளலாம் என்ற ஆவேசமாக குரல் கொடுத்தார் அகில இங்கை மக்கள் காங்ரசின் கல்பிட்டி பிரதேச அமைப்பார் ஜனாப் A.R.M முஸம்மில்.
கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட முழு உடல் பரிசோதனை இயந்திரத்தை Himoglogy(5part)மாவட்ட சுகாதார சேவை அலுவல்கல் காரியாலயத்தினால் வேரொரு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிருத்த வேண்டும் என்று கல்பிட்டி பிரதேச அணைத்து அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டதுடன் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டு இதனை கல்பிட்டி வைத்தியசாலைக்கு அப்பால் கொண்டு செல்வதாயின் தாம் பாரிய எதிர்ப்பினை தெரிவிப்பதாக அனைவரும் ஒன்றிணைது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் கல்பிட்டி பிரதேச உதவி செயலாளரும் கலந்துகொண்டார்.
இப்படியான நடவடிக்கைகளை இனிமேலும் எமது பிரதேசம் விட்டுக்கொடுக்காது. நோயாளிகளைக்காட்டி எமது பிரதேசத்துக்கு வருகின்ற வளங்களை சுரண்டும் பலக்கத்தை யாராக இருந்தாலும் கைவிடவேண்டும். அப்படியும் முடியாத பட்சத்தில் உரிமைகோரி மக்கள் பாதையில் இரங்கவும் தயார் என அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஜனாப் A.R.M முஸம்மில் ஆவேசமாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அத்தோடு இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும்படி சுகாதார அமைச்சர் கௌரவ வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றும் அனுப்பப் பட்டதுடன் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் பாராளுமன்ற உருப்பினர்கள் மாகாண சபை உருப்பினர்களுக்கு பிரதிகளும் அனுப்பப் பட்டுள்ளது.
RIZVI HUSSAIN
0 Comments