கடந்த ௦9.04.2017 ஆம் திகதியிலிருந்து இன்று (11) வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் பல
பிரதேசங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை திறந்துவைப்பதற்காக முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் வருகை தந்துள்ளார்.
தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை
மாவட்டத்துக்கு வருகை தருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரிசாத்
பதியுதீனும் இப்பிரதேசத்துக்கு வருகை தந்திருந்தார்.
ஆனால் தலைவர் ஹக்கீமின் அபிவிருத்தியை
பொறுத்துக்கொள்ள முடியாமலும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் அமைச்சர் ரிசாத்
பதியுதீன் இங்கு வந்ததனால்தான் ரவுப் ஹக்கீமும் இங்கு வந்துள்ளார் என்றும், அவரை
நாங்கள்தான் வரவளைக்கின்றோம் என்றெல்லாம் தாங்கள் நினைத்தவாறு விமர்சனம் செய்வதனை
முகநூல்வாயிலாக காணக்கூடியதாக உள்ளது.
தலைவர் ஹக்கீமின் இன்றைய விஜயத்துக்கான
ஏற்பாடானது கடந்த பல வாரங்களுக்கு முன்பாக திட்டமிடப் பட்டதாகும். இதனை
அறிந்துதான் ஹக்கீம் செல்வதற்கு முன்பு தான் அங்கு சென்றுவிட வேண்டும் என்ற
காரணத்தினால் அமைச்சர் ரிசாத் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்தார் என்ற ஆதாரபூர்வமான
உண்மையை மறைக்க முற்படுகின்றார்கள்.
அதாவது பல கோடி ரூபாய்கள் செலவில் சம்மாந்துறையில்
திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, மற்றும் சிலியட் கட்டடத்தில்
திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லில் குறித்த திகதியும், பெயர்களும்
செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செதுக்கப்பட்ட கல்லினை ஒரு நாளைக்கு முன்பு தயார்
செய்துவிட முடியுமா?
பல வாரங்களுக்கு முன்பு உரிய திணைக்களத்தின்
மூலமாக திகதி நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின்புதான் கல் (நினைவு படிகை கல்) செதுக்கப்பட்டு
உரிய நிகழ்ச்சியின் போது திரைநீக்கம் செய்துவைக்கப்படும் என்கின்ற விடயம்கூட
தெரியாதவர்கள் அரசியல் பேசுவது அவர்களது அறிவினை அவர்களே கேள்விக்குட்படுத்துகிறார்கள்.
எனவேதான் நாங்கள் கூறுகின்றோம் இன்றுடன்
நிறைவடைகின்ற தலைவரின் மூன்று நாள் அபிவிருத்தி நிகழ்ச்சிகள் பல வாரங்களுக்கு
முன்பாக திட்டமிடப்பட்டதானது இரகசியமானதல்ல. இதனை குறித்த திணைக்களத்தின்
அதிகாரிகள் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.
இதனை அறிந்துதான் தலைவர் ஹக்கீம் அம்பாறை
பிரதேசத்துக்கு செல்வதற்கு முன்பாக அங்கு நான்தான் முதலில் சென்றுள்ளதாக காட்டிக்கொள்வதற்காகவும்,
அதன் பின்பு தனது முகநூல் எழுத்தாளர்கள் மூலமாக இவ்வாறான பொய் பிரச்சாரத்தினை உருவாக்குவதற்காகவும்தான்
அமைச்சர் ரிசாத் இங்கு வந்துள்ளார் என்பது எங்களது வாதமாகும்.
அத்துடன் யாருடைய வருகை மக்களுக்கு
பிரயோசனமானதும், பயனுள்ளதுமான அபிவிருத்தியினை வழங்கின்றது என்றும், யாருடைய வருகை
மக்களை ஏமாற்றுகிறது என்றும் அறியாத நிலையில் மக்கள் இல்லை என்பதனை
புரிந்துகொள்வது சிலருக்கு கடினமாகத்தான் உள்ளது.
0 Comments