Subscribe Us

header ads

வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவர்களிடம் டிப்ஸ் : 24 வயதான கர்ப்பிணிக்கு‌ வைத்தியம் பார்த்த 27 வயது மாணவன்


வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவர்களிடம் டிப்ஸ் கேட்டு இளம் மருத்துவ மாணவர் ஒருவர், ரயிலில் பிரசவம் பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அகமதாபாத் – பூரி விரைவு ரயிலில் சென்ற 24 வயதான கர்ப்பிணிக்கு‌த் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு 27 வயது மாணவர் விபின் காட்ஸே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு தெரிந்த மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டு அதன்படி பிரசவம் பார்த்தார். இதன் பிறகு அந்தப் பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தையை கையில் ஏந்தியவாறு எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் அந்த மாணவர் வெளியிட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments