Subscribe Us

header ads

சொகுசு ரயிலில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விபரங்கள் உள்ளே...


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரயிலில் தவறவிடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த ரயிலில் டிக்கட் பரிசோதகராக கடமையாற்றியவரால், குறித்த மோதிரம் உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் அநுராதபுரத்தை கடந்த சந்தர்ப்பத்தில், ரயில் பயணித்த பலர் நித்திரையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ரயில் பயணித்த டிக்கட் பரிசோதகர் ஈ பெட்டியில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிக பெறுமதியிலான தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
யாரும் காணாத இந்த மோதிரத்தின் உரிமையாளரை தேடிய போதிலும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மோதிரத்தின் உரிமையாளர் தன்னை ரயில் உணவகத்தில் வந்து சந்தித்து பெற்றுக் கொள்ள முடியும் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதன் போது பாதுகாப்பு பிரிவில் சேவை செய்யும் சிரேஷ்ட அதிகாரி குறித்த மோதிரம் தன்னுடையதெனவும் அதன் அடையாளங்களையும் தெரிவித்து மோதிரத்தை பெற்றுக்கொண்டார்.
மோதிரத்தை பெற்றுக் கொண்ட அதிகாரி டிக்கட் பரிசோதகருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தான் கிளிநொச்சியில் இருந்து கொழும்பிற்கு செல்லும் போது தனது திருமண மோதிரம் காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில் சேவை செய்யும் நிலையில், தனது சம்பளத்தை விடவும் ஐந்து மடங்கு பெறுமதியான இந்த மோதிரத்தை உரிமையாளரை தேடி வழங்குதென்பதன் ஊடாக தனது நேர்மையான சேவையை பார்க்க முடிந்துள்ளதென அவர் டிக்கட் பரிசோதகரை பாராட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments