Subscribe Us

header ads

யெமன் நாட்டில் 8 வயதே நிரம்பிய சிறுமிக்கு (படங்கள் இணைப்பு)

யெமன் நாட்டில் 8 வயதே நிரம்பிய சிறுமிக்கும் சிறுமியின் உறவுமுறை
மைத்துனருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்த தந்தையை யெமன் நாட்டு பொலிஸார் கைது செய்து 6 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.இச்சிறுமி திருமண வயதை அடையும் வரை  திருமணம் செய்துவைக்க மாட்டேன் என்ற உறுதிமொழி சிறுமியின் தந்தையிடத்தில் பெற்ற பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரபு ஊடகமான கல்ப் நியூஸ்செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் யெமன் நாட்டின் வட மாகாணமான இப்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது,   இச்சிறுமியின் மாமா(இப்திகார் )என்பவர் மூலம் உள்ளூர் ஊடகவியளாளர்களுக்கு  இத்தகவல் அறிவிக்கப்பட்டு   இக்குழந்தை திருமணத்தை  யெமன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சிறுமியின் தாயார் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் என்றாலும் இக்குழந்தை திருமணத்துக்கு சம்மதம் தராவிட்டால்  கனவன் தன்னை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி சம்மதம் வாங்கியுள்ளதாக விசாரனைகளில் தெரிவந்துள்ளது.

 உள்ளூர் கணிஷ்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இச்சிறுமி தனக்கு திருமணம் நடக்கபோவதை அறித்திருக்கவில்லை எனவும் கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யேமன் நாட்டில் நடக்கும் குழந்தை திருமணங்களை யெமன் அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யெமன் சமூக விவகாரங்கள் அமைச்சகம் 2010 ல் வெளியிட்ட ஒரு அறிக்கை படி, யேமன் பெண்கள் நான்கில் ஒருவர் வயது 15 க்கு முன் திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2010 செப்டம்பர் மாதம் 12 வயதே நிரம்பிய ஒரு சிறுமி மூன்று நாட்களாக குழந்தையை பிரசவிக்க அவதிபட்டு மரணித்த செய்தி ஒன்றும் பதிவாகியுள்ளது.யெமன் நாட்டு சட்டங்களின் படி அந்நாட்டு பெண்களின்  திருமண வயது 15 ஆகும்.





Post a Comment

0 Comments