Subscribe Us

header ads

புத்தளம் மணல்குன்று ஹம்ஸா நாநாவின் முயற்சிக்கு தனியார் மற்றும் அரச அமைப்புகள் முன்வந்து உதவுமா??? காணொளி இணைப்பு


குப்பைகள் மத்தியில் தொடரும் வாழ்க்கை போராட்டம்.
" One man's trash another man's treasure "

புத்தளம் நகர சபையினரால் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் மணல்குன்று பிரதேசத்திலுள்ள கொம்போஸ் வீதி வெறும் காணிகளில் நீண்ட காலமாக கொட்டப்படுகிறது.

அதே வீதியில் வசிக்கின்ற திரு. ஹம்ஸா அவர்களது குடும்பம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, குறித்த பிரதேசத்தில் கொட்டப்பட்ட குப்பை கூலங்களை வீட்டுக்கு அள்ளி வந்து முற்றத்தில் கொட்டி, அதிலே வாழ்வாதாரம் தேடுகின்றனர்.
சேகரிக்கப்பட்ட இரும்பு, கடதாசி, பிலாஸ்டிக், கண்ணாடி போன்றவை மீள்சுழற்சிக்காக வெளியூர்களுக்கு அனுப்புவதற்கும் உணவு கழிவுகளை நாட்டு கோழி மற்றும் ஆடு வளர்பபுக்காகவும் பிரிக்கப்பட்டு வளவுக்குள்ளேயே பச்சைய சூழல் உருவாக்கப்படுகிறது.
தாயார் முதற்கொண்டு அசுத்ததுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற புனித பணியை செய்யும் ஹம்ஸா குடும்பம், தமது வயிற்றுப் பிழைப்புக்கு மேலதிகமாக சமூகத்தில் கௌரவமாக வாழ எத்தகைய சகிப்புத்தன்மை கொண்டிருக்க வேண்டும்?
எளிமையான இந்த தொழில் முயற்சி ஹம்ஸா குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் இன்னமும் நன்மை சேர்க்க வேண்டும், ஹலாலான தொழில் முயற்சியை செய்ய முனையும் அடுத்த தலைமுறைக்கு முன்னோடியாக வளர்ச்சி காணவேண்டும்.
மீதொடுமுல்ல குப்பை மலை சரிவை தொடர்ந்து அதனை புத்தளத்தில் கொட்டுவதையும் அல்லது வேறு இடங்களுக்கு அனுப்பி மீள்சுழற்சி செய்வது பற்றியும் அரசாங்கம் அவசரமாக ஆலோசித்து வருகிறது.
அப்படியானால் ஹம்ஸா குடும்பத்தை போன்ற முயற்சியாளர்களை அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ அல்லது உள்ளூர் எழுச்சி அமைப்புகளோ முன்வந்து உதவ வேண்டும்.







Post a Comment

0 Comments