Subscribe Us

header ads

ஆறாவது அகவையில் PAQ - செடியொன்று மரமாகிறது

(Media Unit-PAQ)

புத்தளத்தின் எல்லைக்கு அப்பால் இயங்கும் பல்வேறு சமூக அமைப்புக்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்கும் “கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு – PAQ” ஐந்து படிகள் தாண்டி ஆறாவது படியில் காலடியெடுத்து வைக்கும் இத்தறுவாயில் முதலில் அல்லாஹ்வுக்கும் மற்றும் இதன் பின்னால் இருந்து தட்டிகொடுத்த அங்கத்தவர்கள் உங்களுக்கும் முதற்கண் நன்றிகள் உரித்தாகட்டும்.
இஸ்லாமிய வாழ்க்கை முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய முன்மாதிரி நகராக நமது ஊரை கட்டியெழுப்பும்  பணியில் முடியுமான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குதல் எனும் தூய இலட்சியத்தோடு நட்டுவிக்கப்பட்ட “PAQ எனும் செடிக்கு உரமிட்டு மரமாக வளர்க்க அரும்பாடுப்பட்ட அன்பர்களை  தனது ஐந்தாவது வருடாந்த பொதுகூட்டத்திற்கு பரஸ்பரம் பேணி வரவேற்க காத்திருக்கின்றது.
செடியொன்று விருட்ஷமாக வளர உரம் கண்டிப்பாக தேவை. அவ்வாறுதான் இக்கூட்டமைப்பும் வளர உங்கள் ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கின்றது.
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்றுவரை உங்கள் உதவியாலும் இறைவனின் பேரருளாலும் புத்தளம் நகரின் கல்வி சார் உதவிகள், மருத்துவம் சார் உதவிகள், ஏனைய சமூகம் சார் உதவிகள் என இயலுமான நலத்திட்டங்களை செய்துக்கொண்டு வருகிறது.

* கல்வி சார் உதவிகள்:
-    பாடசாலை மதிற்சுவர் நிர்மாணம்
-    அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை பைகள் அன்பளிப்பு
-    மாணவர்களுக்கான கருத்தரங்குக்கு உதவி
-    ஆசிரியர்களுக்கான கருத்தரங்குக்கு உதவி
-    பாடசாலை காலணிகள் அன்பளிப்பு
-    தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
-    தொழிநுட்ப கற்கைக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு
என இன்னோரன்ன சேவைகளை வெட்டாளை அசன்குந்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம், மணல்குன்று அல்-அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம், சாஹிரா ஆரம்ப பாடசாலை, சாஹிரா தேசிய கல்லூரி, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு செய்திருக்கின்றது, இனிவரும் காலங்களில் செய்யவும் காத்திருக்கின்றது.
* மருத்துவ சார் உதவிகள்:


-    எலும்பு புற்று நோய்க்கான சத்திர சிகிச்சை உதவி
-    முதுகெலும்பு பாதிப்புக்கான நிதியதவி
-    சிறுநீரக சத்திர சிகிச்சை
-    Brain Tumour சத்திர சிகிச்சைக்கான உதவி
-    Bypass அறுவை சிகிச்சை
போன்ற இன்னோரன்ன தேவைகளை, கைக்குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என எல்லா பிரிவினருக்கும் இயன்றளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, இனிவரும் காலங்களில் பூர்த்தி செய்யவும் காத்திருக்கின்றது..

* சமூகம் சார் உதவிகள்:


-    சுயதொழிலுக்கான நிதி உதவி
-    திடீர் அனர்த்தங்களுக்கான நிதியதவி
-    திருமண நிதி உதவி
-    வாழ்வாதார தேவைக்கான நிதியுதவி
-    வலைத்தள புனரமைப்புக்கான உதவி
-    சிறு கட்டிட புனர்நிர்மானத்திற்கான நிதியுதவி
என இன்னோரன்ன சமூகநலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது, இனிவரும் காலங்களில் கவனம் செலுத்தவும் காத்திருக்கின்றது. மேற்கூறியவைகளை புத்தளத்தினை தளமாக கொண்டு செய்தாலும்,
-    இலவச பத்திரிகை விளம்பரம்
-    தொழில் வழிகாட்டல்
-    நேர்முகப்பரீட்சைக்கான ஆலோசனை
-    Room Visit
-    தமிழ் மொழி பயான் நிகழ்வு
-    ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்
என இன்னோரன்ன பணிகளை கத்தாரை தளமாக கொண்டு செய்து வருகின்றது, இனிவரும் காலங்களிலும் செய்யும்.
எமது சகோதரர்கள் இங்கு வழங்கும் சிறு சதகாவே நம்மூரில் மிகப்பெரிய பயன்பாடுகளாக மாறியிருக்கிறது, மாறுகிறது. மாற்றமாக பயனாளிகளிடமிருந்து மிகப்பெரிய முதலீடு எம்மவர்களுக்கு கிடைக்கிறது. இருகரம் ஏந்தி இம்மை, மறுமைக்கான செய்யும் அவர்களின் துஆவை மிஞ்சி எது இருந்துவிட போகிறது.
உங்களது சீரான பங்களிப்பால் ஆறாவது அகவையில் காலடியெடுத்து வைக்கும் Puttalam Association Qatar – PAQ தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை எதிர்வரும் ஏப்ரில் மாதம் 14ம் திகதி (வெள்ளிக்கிழமை) கத்தார் பனார் கேட்போர் கூடத்தில் நடாத்தவிருக்கிறது.
இத்தறுவாயில் இதன் வேர்களாய் திகழும் உங்கள் அனைவரையும் உவகையுடன் வரவேற்கிறது. இவ்வருடாந்த பொதுகூட்டத்திற்கு வருகை தந்து இந்நிகழ்வை வெற்றிகரமான நிகழ்வாக மாற்ற வேண்டும். உங்கள் அமைப்பின் சேவையை தட்டிக்கொடுக்க வேண்டும். அதேநேரம் குறைகளை சுட்டிக் காட்டி அதனை நிறைகளாக மாற்ற உதவி செய்யவேண்டும்.
பழைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை ஒன்று உருவாகவிருக்கும் நிலையில் இவ்வமைப்பின் சொத்தான நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

PAQ – அகவை ஆறு – கத்தாரிலிருந்து புத்தளத்திற்கு..



Post a Comment

0 Comments