Subscribe Us

header ads

இறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ரயில்வே திட்டம்!



புனித நகரங்களான மக்கா மதினாவை இணைக்கும் அல் ஹரமைன் ரயில்வே திட்டம் முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 470 கி.மீ தூரத்தில் இதுவரை 450 கி.மீக்கான பணிகள் முடிந்துள்ளன. புனித மக்கா அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதன்மை ரயில் நிலையமான அல் ருசைபா பிரதேச (Al Rusaifah District) பகுதிகளில் மட்டுமே சுமார் 20 கி.மீக்கான பாதைப் பணிகள் எஞ்சியுள்ளன.

இந்த ரயில் மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் செல்வதுடன் ஜித்தா, கிங் அப்துல்லா எகனாமி சிட்டி மற்றும் ரபீஹ் ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மேல் 138 ரயில்வே பாலங்கள், ஒட்டகங்கள் இருபுறமும் மேயச்சலுக்கு கடந்து செல்ல ஏதுவாய் 12 தடையில்லா பாதைகள், மழை, வெள்ளநீரை வெளியேற்ற 840 நிலத்தடி பாதைகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த அல் ஹரமைன் ரயில்வே திட்டம் பணிகள் முற்றிலும் நிறைவுற்று எதிர்வரும் டிசம்பருக்கு இயக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்:அதிரை நிவ்ஸ்

Post a Comment

0 Comments