Subscribe Us

header ads

சவூதியில் வெளிநாட்டவர்கள் இனி நேரடியாக வியாபாரம் செய்ய அனுமதிக்கும் திட்டம்!


சவுதியில் இதுவரை யாராவது ஒரு வெளிநாட்டவர் சொந்தமாக வியாபாரம் செய்வதாக இருந்தால் சவுதி நாட்டவர் ஒருவரின் பெயரில், அவருடைய ஸ்பான்சரின் கீழ் தான் வியாபாரம் செய்ய முடியும், அதற்காக குறிப்பிட்ட தொகையையும் (Tasattur) சவுதி ஸ்பான்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நடைமுறையே உள்ளது.

இந்த நடைமுறையை மாற்றி சவுதிக்களின் ஸ்பான்சர் தேவையின்றி வெளிநாட்டவர்களை நேரடியாக வியாபாரம் செய்ய அனுமதித்தும், தொழில் அமைவிடம் மற்றும் தொழிலை பொறுத்து சுமார் 20 சதவிகிதம் வரியை அரசாங்கமே வசூலித்துக் கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வியாபாரம் செய்யும் வெளிநாட்டவர்களிடமிருந்து 2 வகையில் வரிகளைப் பெற தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. முதலாவதாக, நம் நாட்டில் உள்ளது போல் முதலீடு, வரவு செலவுகள், லாபம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும், இரண்டாவதாக, செய்யும் தொழில் மற்றும் இடத்திற்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும் குறிப்பிட்ட வரியை வசூலிப்பது (Fixed Tax), இந்த வரி விதிப்பு 15 முதல் 25 சதவிகிதத்திற்குள் இருக்கும்.

இந்த புதிய வரிச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, தடையற்ற வர்த்தக பகுதிகளாக (Free Trade Area) அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிமனைகள் (Workshops), ஒப்பந்தப் பணிகள் (Contracts), உணவுத்துறை (Catering) மற்றும் இதர பணிகளுக்கு (Others) ஆரம்பமாக அனுமதி வழங்கப்படவுள்ளது.


Source: Saudi Gazette

Post a Comment

0 Comments