Subscribe Us

header ads

சிறுவர்களுக்கு கோர்ன் ஃபிளேக்ஸ் குடுப்போர் கவனத்திற்கு…!


வைட்டமின்கள் நிறைந்தது, கொலஸ்ட்ரால் இல்லாதது, எடை குறைக்கும் என்பதுபோன்ற வாசகங்களோடு வெளிவரும் கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn flakes) விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். தினமும் காலையில் சாப்பிட ஏற்றது என்ற ஆலோசனையை நம்பி, நம்மில் பலர் வாங்கிப் பயன்படுத்தியும் இருப்போம். பாலில் கலந்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் நிறைய வீடுகளில் குழந்தைகளின் தினசரி காலை உணவாக இது இடம் பிடித்திருக்கிறது.
கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடக்கூடாது.
கார்ன் ஃப்ளேக்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கலாம். இதனால் ஃபேட்டி லிவர் நோய் (Fatty Liver Disease) என்ற நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
செயற்கையாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் எப்போதுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலிருந்து கார்ன் ஃப்ளேக்ஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது சத்துகள் நிறைந்த உணவுப்பொருளே அல்ல. குறைந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பது மட்டும்தான் இதிலுள்ள ஒரே நன்மை. ஆகவே, விளம்பரங்களைப் பார்த்து உணவுப்பொருளை வாங்குவதற்குமுன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.
அது நமது உடல்நலத்துக்கு உகந்ததா? சத்தானப் பொருட்கள் இருக்கிறதா? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மக்காச்சோளம் சாப்பிட ஆசையாக இருந்தால் இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளத்தை வாங்கிச் சாப்பிடலாமே தவிர ஒருபோதும் கார்ன் ஃப்ளேக்ஸ் வாங்கிச் சாப்பிடாதீர்கள்.
அதேபோல் தினமும் குழந்தைகளுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைக்குச் சத்துக்கள் இல்லாத சக்கை உணவை தருகிறீர்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

Post a Comment

0 Comments