Subscribe Us

காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

(ஆர்.ஹஸன்)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள், வட்டியில்லா கடன் தொகை மற்றும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் என்பனவும்  குறித்த தினம் மு.ப.11 மணிக்கு வழங்கப்படவுள்ளன. 

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

உயர்தர மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 40 மாணவர்கள் மற்றும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான “சிசுதிரிய” புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 40 மாணவர்கள் உள்ளடங்களாக மொத்தம் 80 மாணவர்கள் இந்நிகழ்வின் போது புலமைப் பரிசில் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அத்துடன், 42 பயனாளிகளுக்கு வட்டியில்லா கடன் தொகையும், 8 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன. 

Post a Comment

0 Comments