Subscribe Us

header ads

இலங்கை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட FEB.30 – அதிசயம் ஆனால் உண்மை

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக முழுமையான பொலிஸ் துறை மீதும் அதிருப்பதி நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் கசுன் என்பவர் பொரளையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக பொலிஸார் அவரை நிறுத்தியுள்ளனர்.
குற்றச்சாட்டிற்கு அபராதம் தாள் வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுத்து வைத்துக்கொண்ட பொலிஸ் அதிகாரி, அதனை மீளப்பெறும் இறுதி தினமாக பெப்ரவரி மாதம் 30ஆம் திகதியை குறிப்பிட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளப்பெற சொல்லி இருப்பது கேள்விக்குறியே..
இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் அபராதத்தை கட்டவும்.


Post a Comment

0 Comments