Subscribe Us

header ads

தேனிலவு மற்றும் திருமணங்களுக்கு சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு

தேனிலவு மற்றும் திருமணங்களுக்கு சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் Kuoni என்ற சிறப்பு சுற்றுலா செயலியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தேனிலவு மற்றும் திருமணங்களுக்கு புகழ்பெற்ற Kuoni என்ற சுவிட்ஸர்லாந்து நிறுவனம் 2017ஆம் ஆண்டிற்கான அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய 2017ம் ஆண்டிற்கான திருமணங்களுக்கான சிறந்த நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தையும், தேனிலவுக்கான பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
திருமணமான ஜோடிகள் ரம்மியமான பரந்த இடங்களையும், அடையாளச் சின்னமுடைய நகரங்களையும், சபாரி விடுதிகளையும், தனித்தீவுகள் மற்றும் கோட்டைகளை கொண்ட இடங்களையுமே தேடிச் செல்வதாக குறித்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய மாலைதீவு மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் முதன்மை இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கான சிறந்த பத்து நாடுகள்

தேனிலவுக்கான சிறந்த பத்து நாடுகள்


Post a Comment

0 Comments