Subscribe Us

header ads

ஜெயாவிற்கு சசி அடிக்கடி கொடுக்கும் மாத்திரை!- கார் சாரதி திவாகர் அதிர்ச்சி தகவல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, கொடநாட்டில் அவரிடம் பல வருடங்கள் பணிபுரிந்த கார் சாரதி திவாகர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது.
ஓ.பி. எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் கொடநாட்டில் அவருக்கு கார் டிரைவராக பணியாற்றிய திவாகர்(42) என்பவர், என்பது ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சில பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா கொடநாட்டிற்கு வரும் போது, அவருடைய வாகனத்திற்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் ஓட்டுவேன்.
அப்போது, ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசும் பல விஷயங்களை நான் அருகிலிருந்து கேட்டுள்ளேன். ஆனால் அதுபற்றி நான் வெளியே கூறியது கிடையாது.
ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால், ஜெயலலிதாவை கொல்வதற்கு அன்றைக்கே திட்டம் தீட்டியிருக்கலாம் என எனக்கு சந்தேகம் வருகிறது.
கொடநாட்டிற்கு ஜெயலலிதா வரும் போது, எஸ்டேட்டை சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வார்.
ஒருநாள் படகு சவாரி செய்து விட்டு அவர் காரில் ஏறும்போது, தனக்கு உடல் வலி அதிகமாக இருப்பதாக அவர் சசிகலாவிடம் கூறினார்.
அப்போது, சசிகலாவிடம், வேலைக்கார பெண் சித்ரா ஒரு மாத்திரையை கொடுத்தார். அதை அவர் ஜெயலலிதாவிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.
அதை விழுங்கிய சில நொடிகளில், இப்போது எனக்கு வலி குறைந்துள்ளது என ஜெயலலிதா சொல்வார்.
அந்த மாத்திரையை அவருக்கு அடிக்கடி சசிகலா கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
சாப்பிட்ட உடனேயே உடல் வலி குறைகிறது எனில், அது மெல்லக் கொல்லும் ஆற்றல் உடைய வலி நிவாரணியாகத்தான் அந்த மாத்திரை இருக்க வேண்டும் என எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது.
அவரது மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் பகீர் தகவலைக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மற்றவரிடம் அன்பாக பேசினால் சசிகலாவிற்கு பிடிக்காது!- கார் சாரதி தகவல்
கொடநாட்டில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் சாரதியாக பணி புரிந்த திவாகர் என்பவர் சசிகலா குறித்து பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் கொடநாட்டில் அவருக்கு கார் சாரதியாக பணியாற்றிய திவாகர்(42) என்பவர், என்பது ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சில பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா கொடநாட்டிற்கு வரும் போது, அவருடைய வாகனத்திற்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் ஓட்டுவேன்.
அங்குள்ள அனைவரிடமும் ஜெயலலிதா அன்பாக பழகுவார். ஆனால், சசிகலாவை பார்த்தாலே எல்லோரும் நடுங்குவார்கள்.
யாரிடமாவது ஜெயலலிதா அன்பாக பேசுவது தெரிந்தாலோ, அவர்களின் கோரிக்கையை ஜெயலலிதா நிறைவேற்றுகிறேன் என கூறியது தெரிந்தாலோ, அவர்களை உடனே எஸ்டேட்டிலிருந்து சசிகலா வெளியேற்றி விடுவார்.
எனக்கு தெரிந்து நான்கு பேரை அடித்தே வெளியே அனுப்பினார்கள். இந்த வயதில் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு வாய்ப்பில்லை.
அவருக்கு என்ன நடந்தது என்பது சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
அவர்கள் சட்டத்திலிருந்து தப்பலாம், ஆனால் கடவுளிடமிருந்து தப்ப முடியாது என அவர் ஆதங்கமாக பேசியுள்ளார்.

Post a Comment

0 Comments