பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனர்நிர்மாணப் பணிகள் 75 விகிதம் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஓடுபாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் போக்குவரத்து பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மூடப்பட்ட ஓடுபாதை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி முன்பு இருந்ததை போல இல்லாமல் ஓடுபாதையின் அகலம் 60 மீட்டர்களிலிருந்து 70 மீட்டர்களாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சர்வதேச சேவைகள் நியமங்களுக்கமைய ஓடுபாதையின் பராமரிப்பு மற்றும் புனர்நிர்மாணம் என்பன 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்ற பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது 3 ஆவது மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments