இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டியில் நேற்று புத்தளம் சாஹிரா கல்லூரி மற்றும் யாழ் மானிப்பாய் இந்து கல்லூரி இற்கு இடையில் சாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது.
வழமைக்கு மாறாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதுவும் போதாது என்றே கூற வேண்டும்.
சில பழைய மாணவர்களின் முயற்சியால் பாடசாலை Band வாத்திய குழு வரவழைக்கபட்டு மைதானம் கோலாகலமாக காணப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் சில பொது மக்களின் கைதட்டல்கள், உற்சாகபடுத்தல்களுக்கு மத்தியில் வீரர்கள் தம் திறமையை சிறந்த முறையில் வெளிக்காட்டி 5-1 என்ற இலகுவான வெற்றியை சாஹிராவிற்கு பெற்றுக்கொடுத்தனர்.
சாஹிரவின் நட்சத்திர வீரரான Muzakkir 3 கோல்களையும், Jaheer 2 கோல்களையும் போட்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சாஹிரா இச்சுற்றுபோட்டியின் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யபட்டுள்ளது. அடுத்த Super 8 போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 25,26 ஆம் திகதி காலியில் நடைபெற உள்ளது.
இவ்வெற்றியின் பங்குதாரர்களாக இருந்த பார்வையாளர்கள், ஆதரவாளர்களுக்கு கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவிக்கும் அதே நேரத்தில் இனிவரும் காலங்களில் இதை விடவும் அதிகமான ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.
நன்றி
Zahira Sports
Hanan Ahamed
0 Comments