இது வரை காலமும் நமது தொகுதிக்குள் காணப்பட்ட வேலை வாய்ப்புக்களை எல்லாம் வெளியூர் அரசியல் வாதிகள் அவர்களுக்கு தேவையானவர்களை போட்டே நிரப்பி உள்ளனர்.
கச்சேரி , தபால் நிலையம் ,வைத்திய சாலை , பாடசாலை , பிரதேச செயலகம் , மின்சார சபை, நீர் வழங்கல் சபை, அனல் மின் நிலையம் என்று இதனை நாம் காண்கிறோம் .
இந்த நிலை நமது தொகுதிக்குள் அதிகமான வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது.
எனவே தான் இந்த பட்டதாரிகளின் விடயங்களை உடனடியாக ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் அமைச்சு மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று எதிர்காலங்களில் ஏற்படும் பதவி வெற்றிடங்களுக்கு இவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
தொழில் ஒன்றை நாடி நிற்கும் பட்டதாரிகள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்யுங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் ஏற்பாட்டிலே தான் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
முயற்சித்தால் நீங்களும் சிகரம் தொடலாம்.
0 Comments