கடந்த இரண்டு நாட்களாக கற்பிட்டி அல் -அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் ஒன்றிற்காக அனுமதி கிடைக்காத சுமார் 40 பெற்றோர்கள் பாடசாலையில் தமது பிள்ளைகளையும் உள்வாங்ககோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் ஒன்றினை பாடசாலை நுழைவாயில் முன்பாக மேற்கொண்டு வந்தனர். அவ்வார்ப்பாட்டத்திற்கு பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி அனுமதி மறுக்கப்பட்டமைக்கு பிரதான காரணம் குறித்த பாடசாலையில் 2 வகுப்புக்களே ஆரம்பிக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் உத்தரவே ஆகும். பாடசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து அனைத்து வசதிகள் இருப்பினும் மேலும் ஒரு வகுப்பினை கல்வி அமைச்சின் உத்தரவின்றி ஆரம்பிக்க முடியாது என்ற உண்மை புலப்பட்டது. ஆர்பாட்டத்தரப்பு அரசியல் பிரமுகர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி அமைச்சிற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்த நிலையில் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
KV Reporter; சிபாஸ்
ஆசிரியர் கருத்து: அல் -அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் ஒன்றிற்காக அனுமதி கிடைக்காத மாணவர்களின் பெற்றார் செய்த உன்னாவிறதே போராட்டம் தொடர்பில் பூரண செய்தியை பதிவிட வில்லை. நாம் பொறுப்புவாய்ந்த ஒருஊடாகம் என்ற அமைப்பில் சரியான தகவல்கள் எம்மை வந்தடையும் வரை காந்திருந்தே இன்றைய இந்த செய்தியை பதிவிடுகிறோம். நேற்று சில செய்தி வழங்கும் இணையங்கள் அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு எதிரான முறையில் இந்த பிரச்சினையை சித்தரித்து காட்டி இருந்தது. இதன் உண்மை நிலை உரிய பெற்றார்களும் பழையமாணவர்களும் ஊர் மக்களும் விளங்கி செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
0 Comments