கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையை B தரம் வாய்ந்த தள வைத்தியசாலையாக உயர்த்த அனுமதி கிடைத்திருக்கும் விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்
ஒன்று இன்று கற்பிட்டி வைத்தியசாலையில் நடைபெற்றது இதில் வைத்தியசாலைக்கு
வரக்கூடிய வசதிகள் சம்பந்தமாகவும் அடுத்தமாதமளவில் சுகாதாரா அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன
புத்தளம் வரவிருப்பதால் அவரை கற்பிட்டிக்கும் அழைத்துவரல் சம்பந்தமாகவும்
மற்றும் நீண்டகாலமாக வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் இயங்காமையினால் வைத்தியசாலை
அபிவிருத்தி சங்கம் அமைத்தல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதேவலை
வைத்தியசாலை இடம் மாற்றப்படுமா என கேற்கப்பட்டதற்கு? தரம் உயர்த்தல் நடவடிக்கைகளால்
வைத்தியசாலை இடம் மாற்றப்படமாட்டாது என பாராளுமன்ர உறுப்பினர் அல் ஹாஜ் நவவி அவர்கள் அவர்களால்உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் ACMC யின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் பாராளுமன்ர உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி , ACMC யின் கற்பிட்டி அமைப்பாளர் A.R.M முஷம்மில், SLFP கற்பிட்டி அமைப்பாளர் P.M பாஹிம், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்புனர் S.H.M சமான் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர்.
KV Reporter: Rizvi Hussain
0 Comments