அல் -அக்ஸா தேசிய பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் 31-01-2017 அன்று கல்லூரியின் அதிபர் திருமதி ரோஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளரும் கௌரவ அதிதிகளாக தமிழ் பிரிவுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் கற்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளரும் அழைக்கப்பட்டிருந்ததோடு இன்னும் பொலிஸ் உயரதிகாரி, அரசியல் பிரமுகர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இல்ல விளையாட்டு போட்டிகளின் முடிவின் படி ஜெருசலம் இல்லம் முதலாம் இடத்தையும் மதீனா இல்லம் இரண்டாம் இடத்தையும் மக்கா இல்லம் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன.
மக்கா இல்லம்
மதினா இல்லம்
ஜெருசலம் இல்லம்
பட உதவி: Rizvi
0 Comments