அன்றைய மஹிந்த அரசில் வில்பத்து பிரதேசத்தை அண்டி வாழும் மரிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி போன்ற பிரதேச மக்களின் இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கிய அரசாங்க அறிவிப்பே 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 நாள் வெளியிடப்பட்ட A1979/15 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிக்கையாகும். அவ்வர்த்தமானி அறிவிப்பானது 14,943 ஏக்கர் நிலப்பரப்பினை வனப்பரிபாலன தினைக்களத்திற்கு (Department of forest conservation) சொந்தமான காட்டின் எல்லைப்பகுதி(Forest Reserve) என சுட்டிநிற்கின்றது. அவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலப்பரப்பானது உண்மையில் வில்பத்து சரனாலயத்துக்குரிதில்லை என்ற உண்மையினை அரசாங்கம் ஒப்புக்கொண்டாலும் வனப்பரிபாலன தினைக்களத்திற்கு சொந்தமான வனத்தினது எல்லை (Forest Reserve) என்பதை இவ் நல்லாட்சி அரசாங்கமும் ஏற்றுக்கொள்கிறது என்பதற்கான அறிவிப்பையே வெளிப்படையாக அத்தினைக்களத்திற்க்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சனாதிபதி அன்மையில் விடுத்திருந்தார். மேலும் 20 ஆம் இலக்க வனப்பாதுகாப்பு நியதிச்சட்டப்பிரிவானது (section 20 of forest conservation ordinance) இந்நிலங்களை பரிபாலிக்கின்ற அதிகாரத்தை அத்தினைக்களத்திற்க்கு வழங்கியிருப்பதோடு அப்பிரதேசங்களை அழிப்பதோ குடியிருப்பதோ பிழை என காண்கிறது. இச்சட்டத்தின் படி இங்குள்ள குடியேற்றங்கள் சட்டரீதியானவை அல்ல.மேலும் அம்மக்களை குற்றவாளிகளாக காணவும் சட்டத்தில் இடமிருக்கிறது. உண்மையில் இந்நிலங்கள் பூர்வீகமான முஸ்லிம்களுக்கு சொந்தமானவை என்பதற்கான சான்றுகளை நிரூபிக்க முடியுமாயினும் அவ் வர்த்தமானி அறிவிப்பு இருக்கும் வரை சட்டபூர்வமாக அக்காணிகளை அம் மக்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்ற உண்மையினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அவ்வகையில் அம்மக்களின் வாழ்விடத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் செய்ய வேண்டிய நடவடிக்கை 2012 October 10 ஆம் நாள் வெளியிட்ட வர்தமானி அறிவிப்பில் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலப்பரப்புக்களை விடுவிப்பதாகும். அல்லது புதியதொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுதலாகும். மஹிந்த அரசாங்கம் கொண்டுவந்த 18 ம் யாப்புத்திருத்தத்தினை நீக்க 19 ஆவது அரசியல் திருத்தத்தை இவ் நல்லாட்சி அரசுக்கு கொண்டு வர முடியுமாயின் மஹிந்த அரசாங்கத்தால் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அவ் வர்த்தமான பத்திரத்தை ஏன் மீளப்பெற முடியாது என்பதே எனது கேள்வியாகும். மறுபுறம் இவ் மக்களின் இருப்பிடத்தை வைத்து அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகின்றமை கண்டிக்கத்தக்கதாகும். அறிக்கைககளோ, மாநாடுகளோ, விவாதங்களோ அம்மக்களின் வாழ்விடங்களை திருப்பித்தர போவதில்லை என்ற நிஜம் நிரூபணமாகியிருக்கிறது. மாறாக இளைஞர்களே, அரசியல் பிரமுகர்களே, புத்திஜீவிகளே நாம் உங்களிடம் முன்வைக்க ஆசைப்படுகின்ற விடயம் என்னவெனில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றாய் திரண்டு அவ் அப்பாவி மக்களுக்காக போராட்ட வடிவில் அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற அழுத்தத்தால் மாத்திரமே அவ் வர்த்தமானியினை மீளப்பெறவோ அல்லது திருத்தத்தினை மேற்கொள்ளவோ வைக்க முடியும் என்ற உண்மையாகும். (இளைஞர்கள் விழிக்காதவரை இனத்திற்கான விடுதலை கிட்டப்போவதில்லை)
* இக்கட்டுரையின் நோக்கம் ஒரு சமூகத்திற்கான விழிப்புணர்வு அன்றி வேறில்லை.
-Sifas Nazar BA, READING LLB (OUSL)
தலைவர்,
உயர்கல்வி மாணவர் அமைப்பு.
* இக்கட்டுரையின் நோக்கம் ஒரு சமூகத்திற்கான விழிப்புணர்வு அன்றி வேறில்லை.
-Sifas Nazar BA, READING LLB (OUSL)
தலைவர்,
உயர்கல்வி மாணவர் அமைப்பு.
0 Comments