திம்புலாகல வன ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்ட 7 வயதுடைய முஸ்லிம்
சிறுவனொருவன் பௌத்த துறவியாக திருநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வொன்று
இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமை தேரர் மிலானே சிறியலங்கார தேரர் தெரிவிக்கையில்,
இவ்வாறு ஆச்சிரமத்தில் இணைக்கப்பட்ட சிறுவனின் தாய் வெளிநாடொன்றில்
வசித்து வருகிறார். தந்தையாரான ஹமீட் ஸ்மைல் என்பவர் மகனை இங்கு கொண்டு
வந்து இணைத்தார்.
குறித்த மாணவன் தற்போது இரத்தினபுரி சிறி சுதர்சனலங்கார என்ற நாமத்தில்
தேரராக திருலைப்படுத்தப்பட்டு, சிங்கள, தமிழ் மற்றும் பௌத்தத்தை கற்கும்
சிறுவர்களுடன் குறித்த ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான சம்பவம் நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
வித்தியாசமான நெறிமுறைகளை உள்ளடக்கி பௌத்த துறவிகள் பௌத்தத்தை
கற்பதற்கான இடமாக திம்புலாகல வன ஆச்சிரமம் அமைந்துள்ளதென அவர் மேலும்
தெரிவித்தார்.
0 Comments