Subscribe Us

header ads

மாற்றம் செய்வதாய் எண்ணி மாட்டிக்கொள்ளப்போகிறது நல்லாட்சி - Sifas Nazar

மஹிந்த அரசாங்கத்தின் நிலைபேற்றை தோற்கடித்து புதிய நல்லாட்சி கோஷத்தோடு வந்த அரசாங்கமே இன்று காணப்படுகின்ற ரனில் விக்ரமசிங்க மற்றும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கமாகும்.உண்மையில் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களோடு இவ் அரசாங்கத்தை நிறுவினர் அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்வுபூர்வமாக சிந்தித்து ஆணை வழங்கினர். விவசாயிகளும் இளைஞ யுவதிகளும் எதிர்கால கனவோடு அரசாங்கத்தை அமைக்க பாடுபட்டனர். என்றாலும் இன்று நல்லாட்சி அரசானது நம்பி வாக்களித்த அனைத்த தரப்பினரையும் ஏமாற்றத்தில் தள்ளி இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. எவ்வாறெனில் முஸ்லிம் மக்களோ கடந்த அரசாங்கத்தில் தாம் பாதிக்கப்பட்ட இனவாதத்திற் கெதிராகவே இவ் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர் ஆனால் இன்றோ நாட்டின் நீதி அமைச்சர் இனவாதிகளை பாராளுமன்றம் அழைத்து பேசுகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. மேலும் முசலிப் பிரதேச மக்களின் பாரம்பரிய நிலத்திற்கெதிரான அறிவிப்பை நாட்டின் தலைவரே விடுத்திருந்தார் மறைமுகமாக அது GSP+ சலுகையினை பெறுவததற்கான நிபந்தனைகளில் ஒன்றாகிய சுற்றாடல் பாதுகாப்பு என்ற அம்சத்தினை சனாதிபதி நிறைவேற்றுகிறாரா? என்ற சந்தேகத்தை எழுப்ப முடியுமானாலும் முசலி மக்களை பொறுத்தவரையில் நல்லாட்சி அரசானது இருப்பினை கேள்விக்குரியதாக்கிய செயலாகவே பார்க்கப்பட முடியும்.   படித்த பட்டதாரிகளை பாரிய ஏமாற்றத்திற்குற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்மானமே போட்டிப்பரீட்சைகளின்றி அரசாங்க சேவைக்குள் பட்டதாரிகளை உள்ளீர்பதில்லை என்ற தீர்மானமாகும். உண்மையில் நான்கு வருடங்கள் படித்து பட்டம் பெற்றவர்களின் தகுதியை மூன்று மணிநேர பரீட்சையின் மூலம் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்ற வினா பாரியளவில் விமர்சனத்தை தோற்றுவித்து பட்டதாரிகளை நல்லாட்சி அரசுக்கெதிராக தூண்டியிருக்கிறது எனலாம். மற்றும் தமிழ் மக்களோ அரசியல் தீர்வு என்ற ஒன்றுக்காகவே இவ் அரசுக்கு ஆதரவளித்தனர் ஆனால் இன்றுவரை எவ்வித அரசியல் தீர்வு தொடர்பான முன்மொழிவுகளும் மொழியப்படாமை அம்மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மலையக மக்களோ யாவற்றுக்கும் மேலாக 1000 ரூபாய் சம்பளம் என்ற கோரிக்கைக்காக வாக்களித்தனர் ஆனால் இன்று அடிப்படை சம்பளத்தினை பெறுவதற்காக கூட ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. வசதி படைத்த வர்க்கமானது வாகனம் மீதான விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் மீது அதிருப்தியடைந்திருக்கிறது. சில மருந்துப் பொருட்களுக்கு விலையை குறைத்தாலும் VAT வரி என்ற ரீதியில் மறைமுக சுரன்டலை தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்கின்ற விதம் அம்பலமாகியிருக்கிறது. தனியார் பணியாளர்களின் 2500 ரூபாய் சம்பள உயர்வு எழுத்தில் மாத்திரமே காணப்படுவதாக அங்கலாய்க்கப்படுகிறது. எனவே மாற்றம் என்ற கோஷத்தோடு வந்த அரசானது முன்வைத்த மாற்றங்கள் ஏமாற்றங்களாக மாறியிருக்கின்ற நிலையையே காணமுடிகின்றது. நல்லாட்சி அரசின் மீதான மக்களின் நிலைப்பாடு வரும் உள்ளூராட்சி தேர்தலில் வெளிப்படும்.
-SIFAS NAZAR B.A,READING LLB (OUSL)

Post a Comment

0 Comments