எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை அமைச்சின் செயலாளரிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா
வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால் எல்லை நிர்ணய அறிக்கை
அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர்
அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பதில் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் இராஜாங்க அமைச்சர்
அல்லது பிரதி அமைச்சரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அமைச்சின் செயலாளரிடம் வழங்கி, அவர் பெற்று கொண்டதனை
எழுத்து மூலம் உறுதி செய்யும் ஆவணமொன்றை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக
அசோக பீரிஸ் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


0 Comments