இங்கிலாந்து கவுண்டி அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சசக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே கிளப் வீரர்கள் ரோரி பர்ன்ஸ்– ஹென்ரிக்ஸ் கேட்ச் பிடிக்க முயன்றபோது நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஹென்ரிக்சுக்கு 3 இடங்களில் தாடை கிழிந்தது. பர்ன்சுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இருவரும் சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி ரோரி பர்ன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதயத்தை நெகிழவைக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் படுக்கையில் படுத்திருந்தபடி ஒருவர் கையை ஒருவர் பற்றிய படி உள்ளனர். மேலும் அந்த டுவிட்டர் செய்தியில் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரோரி பர்ன்ஸ்.


0 Comments