பாடசாலை மாணவர்களுக்கு மாலை நேர அல்லது வார இறுதியில் மேலதிக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையங்களை ஒரு கூட்டமைப்பின் கீழ்க் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அல்குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சிகள் முதல் பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களை மீட்டுவதற்காக ஒழுங்குகள் வரை பலவகையான பகுதி நேர கல்வி நிலையங்கள் இயங்குகின்றன.
தனியான பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி, பாடநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், சஞ்சிகைகள், பயிற்சி முகாம்கள் முதலானவற்றை ஒவ்வொரு கல்வி நிலையங்களும் தனித்தனியாக மேற்கொள்ளவதன் மூலம் குறித்த கல்வி நலையங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன.
எனவே ஒரு கூட்டிணைவின் மூலம் குறித்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று இக்கல்வி நிலையங்களை நடாத்தி செல்லும் சகோதரர்கள் சிலர் கருதுகின்றனர்.
இந்த பலமான கட்டமைப்பின் ஊடாக மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி, வாசிப்பு நூல்கள், சஞ்சிகைகள், பயிற்சி முகாம்கள் முதலானவற்றை காத்திரமான பொறிமுறையினூடாக பகிரகொள்வது மற்றும் புதிய இலக்குகளை அடைந்து கொள்வதது என்பன சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.
இந்த கூட்டிணைவுக்கான ஏற்பாட்டு ஒழுங்குகளை நாம் மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
ஆர்வமுள்ள கல்வி நிலைய உரிமையாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் தெரிவு செய்யப்படும் ஒரு நிர்வாகக் குழு இந்தக் கட்டமைப்பை முன் கொண்டு செல்லும்.
இதற்கான முதற்கட்ட ஒன்றுகூடலை எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் கொழும்பில் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் இவ்வாறான கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் எனில் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிரதேசங்களில் அவ்வாறான கல்வி நிலையங்கள் இயங்குமாயின் அது குறித்து எமக்கு அறியத்தாருங்கள்.
(கவனிக்க - டியுசன் நிலையங்கள் அல்ல)
ஜஸார் ஜவ்பர்
0777751737
jasaar@gmail.com