Subscribe Us

கற்பிட்டி பிரதேசத்தில் இப்படியும் இளைஞர்களா?

இரு நாட்களாக கற்பிட்டி பிரதேசத்தில சுமார் 32 அணிகளின் பங்குபற்றுதலோடு கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று கற்பிட்டி கிரிக்கெட் சம்மேளனம் (KALPITIYA CRICKET CLUB)  என்ற புதிய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் விஷேசம் என்னவெனில் வழமைபோன்று அல்லாமல் இவ் சுற்றுப்போட்டியானது சமூகத்தின் வருங்காள தேவையினை மையமாக கருதி அதாவது கற்பிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் இல்லாத கடினப்பந்து கிரிக்கெட்  (HARD BALL CRICKET) விளையாட்டினை ஆரம்பிப்பதற்கான நிதி மற்றும் ஆதரவு திரட்டுகின்ற முயற்சியாக இச்சுற்றுப்போட்டி அமைந்திருப்பதுவே ஆகும். இதுவரை காலமும் கற்பிட்டி பிரதேசத்தில் எந்த ஒரு இளைஞர் சமுதாயமும் செய்ய எத்தனிக்காத விடயத்தினை செய்கின்ற கற்பிட்டி கிரிக்கட் சம்மேளத்தினது (KCC)  முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு இவ் இளைர்களின் முயறசி்யில் அனைவரையும் கைகோர்க்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.            -SIFAS NAZAR BA, READG LLB.                                         தலைவர்,                               உயர்கல்வி மாணவர் அமைப்பு (HSPA)

Post a Comment

0 Comments