கொழும்பிலிருந்து குப்பை கூளங்களை
புத்தளத்துக்கு கொண்டு வருவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை (14) ஜும்மா தொழுகையை
தொடர்ந்து 12.45 க்கு புத்தளம் ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மினாராவிலிருந்து
ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்ட பேரணி புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை செல்ல
உள்ளது.
புத்தளம் சர்வ மத ஒன்றியமும், புத்தளம் இளைஞர் அமைப்பும் இணைந்து இந்த பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
புத்தளம் மாவட்டத்திலிருந்து இன, மதங்கள்
பாராது அனைத்து இன மக்களும் இதில் இணைந்து கொள்ள உள்ளனர். பெண்களும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் குதிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments