Subscribe Us

header ads

கொழும்பு கொலன்னாவ குப்பை கூளங்களை புத்தளத்துக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணி


ரூஸி சனூன்  புத்தளம்
கொழும்பு கொலன்னாவ குப்பை கூளங்களை புத்தளத்துக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணி வெள்ளிக்கிழமை (14) ஜும்மாஆ தொழுகையை தொடர்ந்து புத்தளத்தில் இடம்பெற்றது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பெரிய பள்ளி நிர்வாகம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சர்வமத ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் நகரின் சகல ஜும்மா பள்ளிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் புறப்பட்ட  ஆர்ப்பாட்டம் புத்தளம் தபால் நிலைய சந்தியில் ஒன்று சேர்ந்து பாரிய பேரணி தொடராக புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் மாவட்டத்திலிருந்து இன, மத, மொழிகள் வேறுபாடுகளின்றி அனைத்து இன மக்களும் சூழலை பாதுகாக்கும் நோக்கில் கலந்து கொண்டிருந்தனர்.
Photos by Hasni Ahamed
Thanks Puttalam Online 

Post a Comment

0 Comments