Subscribe Us

இலங்கை மின்சார சபையின் தலைவர் அவர்களே இ.து உங்களின் கவனததிற்கு


-இர்ஷாத் றஹ்மத்துல்லா 

புத்தளத்தில் நாளொன்றுக்கு  பல தடவைகள் தீடீர் மின் தடை ஏற்படுத்தப்படுவது தொடர்பில் பாவணையாளர்கள் தமது அதிருப்த்தியினை வெளியிட்டுள்ளனர்.

ஹஜ் பெருநாள் தினமான திங்கட்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட மின் தடையினால் குறிப்பாக முஸ்லிம்கள் பெரிதும் சிரமப்பட்டதாகவும்,இதே போன்று தினந்தோறும் 6 முதல் 10 தடவை வரை மின் தடை ஏற்பட்டுவருவதாகவும்,இது தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதிலை அதிகாரிகள் வழங்குவதில்லையெனவும் நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் நுரைச்ஆசாலை அனல் மின்சார நிலையம்,மற்றும் காற்றாடி மின் உற்பத்திகள் இடம் பெற்ற போது,இதன் மூலம் புத்தளம் மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லையென நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்களினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மின்பாவணையாளர்கள் இலங்கை மினசார சபையினை முற்றிகையிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மின்பட்டில் செலுத்தும் காலம்  சற்று  தாமதமாகினால் உடனடியாக மின்சார சபை அதிகாரிகள் துண்டிப்பினை செய்வதாகவும்,நுகர்வோரின் முறைப்பாடுகள் தொடர்பில் அலட்சியப் போக்கினை அதிகாரிகள் கடைப் பிடிப்பதகாவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments