இந்து மதம் குறித்த விமர்சனங்கள் இந்து புராணங்கள் மற்றும் வேதங்கள் குறித்த எதிர்க்கருத்துக்களை, எந்த மதத்திலும் நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர்களும், பெரியாரிய இயக்கத்தவர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
அத்தகையப் பதிவுகளை முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறவர்கள் பரவலாக பகிர்வதை காணமுடிகிறது. அத்தகைய செயல்கள் ஒரு எதிர்மறையான விளைவுகளைதான் ஏற்படுத்துக்கிறது.
இந்துமதத்தின் மீதான விமர்சனங்களை ஒரு முஸ்லிம் சொல்லும்போது, அந்த விமர்சனத்தில் இருக்கும் உண்மையை உணர்வதற்கு பதிலாக, முஸ்லிம் மதத்தின் மீதான வெறுப்புணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாகிறது.
இங்கே இரண்டு கேடுகள் விளைகிறது. இந்து மதத்தின் மீதான விமர்சனங்கள் அர்த்தமற்றதாகிவிடுகிறது.
முஸ்லிம்கள் மீது வீண் வெறுப்புணர்வு வளர்கிறது.
எனவே இத்தகைய செயல்களை கைவிடவும். இந்துத்துவ அடிப்படைவாதம் எப்படி இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை பேசுவதில் எந்த சிக்கலும் இல்லை. கண்டிப்பாக அது உரிமையுடன் பேசப்படவேண்டும்.
ஒரு மதத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டு இன்னொரு மதத்தை விமர்சிக்கும் செயலை பெரியாரும் மிகக் கடுமையான சொற்களால் சாடியிருக்கிறார்.
எனவே முடிந்தால், முஸ்லிம் மதத்திற்குள் இருக்கும் சிக்கலை, பிற்போக்குதனங்கள் குறித்து பேசுங்கள்.
இல்லையென்றால், மற்ற மதங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசாதீர்கள். ஏனென்றால் அது எந்த நன்மையையும் பயக்காது!
Prabhaharan : https://www.facebook.com/profile.php?id=100004021101835


0 Comments