உலகம் முழுவதிலிருந்தும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் கென்யா நாட்டை சேர்ந்த 30 பெண் ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு ஹஜ் செய்ய அனுமதி மறுத்து விட்டது.
அனுமதி மறுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் கென்யா அரசு அதிகாரிகள் மூலமாக எவ்வளவோ எடுத்துக்கூறியும் எவ்வித மாற்றமும் இல்லை.
இதற்கிடையில் கென்யா நாட்டிற்கே ஹஜ் செய்ய சவூதி அரேபிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், கென்யாவில் பரவி வரும் தொற்று நோயின் காரணத்தினாலும் சவூதி அரேபிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் வதந்திகள் வேகமாக பரவியது.
இதுதொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகள் கூறுகையில்....
சவூதி அரேபிய நாட்டு சட்டப்படி ஹஜ், உம்ரா செய்ய வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய 40 வயதுக்கு உட்பட்ட பெண் பயணிகள் மஹரமான ஆண் துணையுடன் வர வேண்டும். மஹரமில்லாமல் வரக்கூடியவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை,
அந்த வகையில் மட்டுமே கென்யாவை சேர்ந்த 30 பயணிகள் மஹரம் இல்லாமல் வந்ததால் அவர்களை திருப்பி அனுப்பியதாகவும், மார்க்க விசயத்தில் எந்தவித சமரசத்தையும் சவூதி அரேபிய அரசு செய்து கொள்ளாது என்றும் தெரிவித்தார்கள்.
0 Comments