Subscribe Us

header ads

ஐபோன் 7 வெளியாகும் தினம் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியாகின


அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 7 ஐ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளியிடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்கான அழைப்பிதழை அப்பிள், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐபோனுடன் , அப்பிள் கடிகாரமொன்றையும் அப்பிள் வெளியிடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐபோன் 7 தொடர்பாக பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.      

பெரிய திரை, இரட்டைக் கெமரா ஆகியவற்றைக் ஐபோன் 7 கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி, மேம்பட்ட படப்பிடிப்பு திறன் மற்றும் வன்பொருள் ஆகியவற்றைக் கொண்டிருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் புதிய ஐபோன்  3.5mm Audio Jack ஐ கொண்டிருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

இதை விட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரு மாதிரிகள் வெளியாகவுள்ளன.

வயர்லெஸ் சார்ஜிங், தண்ணீர் , தூசியிலிருந்தான பாதிப்பு ஆகிய வசதிகளையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் விலை பின்வருமாறு இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments