பிரான்ஸ் நாட்டில் உள்ள நிஸ் நகரில் கன்டெய்னர் லாரியை வேகமாக ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது ஏற்றி ஏராளமானவர்களை கொன்ற நபர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது.
பிரான்சில் வசித்து வந்த அவர் துனீஷியா நாட்டில் உள்ள சகேன் நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். 31 வயதான அவரது பெயர் முகமது லாகோயேஜ் பவுலெல் என்றும், திருமணமான அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் பிரான்சு போலீஸ் தரப்பில் கூறியதாக துனீஷியா பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 4 ஆண்டுகளுக்கு முன் முகமது லாகோயேஜ் பவுலெல் தனது சொந்த ஊருக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முகமது லாகோயேஜ் பவுலெல்லின் முன்னாள் மனைவியிடம் பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 Comments