Mohamed Nizous
வெட்டிக் கொடி ஏற்றி- கபுறினை
முட்டும் வரை முட்டி - சில பேர்
கெட்ட வழி செல்வார் -அடியார்கள்
அடேயப்பா
இட்டுக் கதை கட்டி-ஓதிட
மெட்டுப் பல கட்டி - மெளலூதை
துட்டுப் பெற படிப்பார் -படித்தோரும்
அடேயப்பா
பித் அத் இது என்று -தெளிவாக
பத்வா பலர் தந்தும் - அதனை
சற்று இவர் எடுத்து -ஒரு போதும்
படியார் பா.
உள்ளே உள்ளவர் வலியுள்ளாஹ்வா?
உள்ளத்தைப் பார்க்க வழியுள்ளதா?
உள்ளே உள்ளவர் வலியுள்ளாஹ்வா?
உள்ளத்தைப் பார்க்க வழியுள்ளதா
(வெட்டிக் கொடி...)
இன்னுமோர் மதத்தின் சடங்கை
எடுப்பது மடமையடா.
இல்லாத புதுமை புகுத்தல்
இஸ்லாத்தில் பித் அத்தடா.
மார்க்கத்தை விற்கிறார் மகான்கள் பெயரால்.
பேருக்கும் ஊருக்கும் பேசுறார் இஸ்லாம்.
உள்ளே உள்ளவர் வலியுள்ளாஹ்வா?
உள்ளத்தைப் பார்க்க வழியுள்ளதா?
(வெட்டிக் கொடி)
வந்தனம் செய்தல் கபுர்க்கு
வலிதான சிர்க்காகும்டா
சந்தனக் கூடு சரியா
சிந்தனை செய்வாயடா
இறையிடம் கேட்பாய் மறை வழி நடப்பாய்
குறையிலா மார்க்கத்தில்
கறைகளை தடுப்பாய்
உள்ளே உள்ளவர் வலியுள்ளாஹ்வா?
உள்ளத்தைப் பார்க்க வழியுள்ளதா?


0 Comments