Subscribe Us

போலியான யுரேனியத்திற்கு ஏமாந்த அல்கைடா இயக்கம்

பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்டதால் சூடானில் தஞ்சமடைந்த அல்கைடா இயக்கம்.தனது அவமானக் காயங்களை நக்கிக் கொண்டு இருந்த 1990 களில் ஒரு நாள்..

அந்த வாட்டசாட்டமான இராணுவ அதிகாரி அல்கைடா கேம்ப் இற்குள் நுழைகிறார்..

"ஒஸாமா பின் லேடன் இருக்காரா " ?

" இல்லை, என்ன விசயம் ? "

" ஒரு முக்கிய மேட்டர் இருக்குது, அவருகிட்ட பேசனுமே.."

" அவர் தெற்கு சூடான் போராளிகளைப் பார்க்க போய் இருக்கிறார்..திரும்பி வர மூன்று நாளாகும்.."..

" என்னிடம் அணுகுண்டு தயாரிக்க தேவையான யுரேனியம் இருக்குது. தேவை என்றால் சொல்லுங்கோ.."

என்ன பேச்சு இது..ஏதோ நாட்டுக் கோழி ரெண்டு இருக்கிறது.விரும்பினால் சொல்லுங்கோ என்ற ரேஞ்சுக்கு யுரேனியம் இருக்கிறது என்கிறார்.அவ்வளவு தான்.செய்தி உடனே ஒஸாமாவுக்கு பறக்க.

அடுத்த சில மணி நேரங்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின..ஒன்றரை மில்லியன் டொலரிற்கு யுரேனியம் அல்கைடாவுக்கு விற்கப்பட்டது..மூட்டைகளில் பணமும் , யுரேனியமும் கை மாறின.

ஆனால் விற்றதுக்கோ, வாங்கினதுக்கோ ஒரு ஆதாரமும் இல்லை..நமது வீட்டுக்கு வரும் கீரைக்காரியிடம் கீரை வாங்குகிற மாதிரி..

அல்கைடா சந்தோசத்தில் துள்ளி குதித்தது.இனி எவனாலும் ஒன்றும் புடுங்க முடியாது..தொன் கணக்கில் அணுகுண்டு தயாரிக்கப் போகிறோம்.." அடியேய் அமெரிக்கா இருக்குடி உனக்கு ஆப்பு.." பரவசத்தின் உச்சத்தில் இருந்தார் ஒஸாமா..

உலகம் முழுவதும் உள்ள அதன் நெட்வேர்க் படு சுறுசுறுப்பானது..விஞ்ஞானிகள்,வைத்தியர்கள், கணித வல்லுனர்கள்,கம்புயூட்டர் புலிகள் என்று ஆயிரக்கணக்கில் படிச்ச கிரிமினல்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அணு ஆயுத ஆராய்ச்சியில் சொக்கிப் போன தருணம் அது..

ஒரு மாலை நேரம் .தயங்கித் தயங்கி அந்த அறிக்கையை ஒஸாமாவிடம் கையளித்தது அணுகுண்டு தயாரிக்கும் குழு..பார்த்தவுடன் பெரிய சத்தத்தில் அலறினார் ஒஸாமா." இந்த யுரேனியம் போலியானது" இதை விற்று புறக்கோட்டையில் நூறு ரூபா விற்கு இருபது ரம்புட்டான்களும் வாங்க முடியாது..வீட்டிற்கு குரங்குகள் வந்தால் கொளுத்தும் வெடி இதை விட தரமானது..

எப்பேர்பட்ட..அவமானம்,ஏமாற்றம்..சே..உலகின் நம்பர் வன் தீவிரவாத இயக்கம் போயும் போயும் ஒரு டுபாக்கூரிடம் ஏமாந்து போன விநோத சரித்திரம் இது..எப்படியோ உலகம் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

எமது வாழ்க்கையிலும் இப்படியான நிறைய ஏமாற்றங்கள், பெரிய, பெரிய ஆப்புக்கள் கோலம் போட்டு வரிசை கட்டி வரவேற்க காத்திருக்கின்றன..அவைகளை இனம் கண்டு புத்திசாலித்தனமாய் காய்களை நகர்த்துவதிலேயே எமது வெற்றி தங்கி இருக்கிறது......

-Zafar Ahmed-

Post a Comment

2 Comments