Subscribe Us

எமது கட்சி எந்தவித பணமும் பெறவில்லை சத்தியம் பண்ணவும் தயார் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு


நேற்றைய ஜப்னா முஸ்லிம் , மடவளை போன்ற இணைய தளங்களில் முகம்மது தம்பி மரைக்கார் என்பவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல் யாப்பின் 18 வது திருத்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதற்கு பணம் பெற்றதாக ஒரு பொய்யான எந்தவித ஆதாரமும் இன்றி ஊடகதர்மத்தைத் மீறி தனது எஜமானர்களை திருப்தி படுத்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார் ,

இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் பிரதி அமைச்சருமான ஹரீஸ் கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லிம் காங்கிரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர் .இது ஓர் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மேலும் எமது கட்சி முன்னாள் ஆட்சியாளரிடமிருந்து 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவை வழங்குவதற்காக எவ்வித பணமும் பெற்றுக் கொள்ளவுமில்லை அது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படவுமில்லை என குறிப்பிட்டதுடன் அதனை அல்லாஹ் மீது ஆணையிட்டு மக்கள் முன்னிலையில் சத்தியமிட்டு கூறவும் தயார் எனக் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments