Subscribe Us

அளக்கட்டு பிரதேசத்தில் மின்சாரத்தை திறந்து வைத்தார் அமைச்சர் றிஸாட் (படங்கள்)


(எஸ்.எச்.எம்.வாஜித்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஸாட் பதியுதீன் நேற்றுமாலை அளக்கட்டு பிரதேசத்தில் மீள்குடியேறி உள்ள  பிச்சைவாணிபங்குளம்,பொற்கேணி,அகத்திமுரிப்பு மற்றும் வேப்பங்குளம்  கிராமத்திற்கு மின்சாரத்தை திறந்து வைத்தார்.

அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில் பகுதியில் மின்சாரம் இல்லாமல் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தீர்கள் அதை விட பல மடங்கு பல்வேறுபட்ட கஷ்டங்களை நான் எதிர்க்கொண்டு இந்த பிரதேசத்தில் இருக்கின்ற உங்களுக்கு காணிகளையும்,விடுகளையும்,விதிகளையும் பெற்றுத்தந்தேன் கட்டம் கட்டமாக பல வேலை திட்டங்களை உங்களுக்கு செய்ய இருக்கின்றேன்,என்றார்.

இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் மற்றும் தவிசாளர்கள் ஆன அமீன் ஹாஜியார்,மீல்ஹான் சட்டத்தரணி இன்னும் கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Post a Comment

0 Comments