Subscribe Us

மன்னார் மரிச்சிக்கட்டி பாடசாலை அதிபரின் இடமாற்றம் ஏற்கமுடியா நடவடிக்கை


மன்னார் மரிச்சிக்கட்டி கிராமத்தில் அமைந்துள்ள‌ பாடசாலை மிகவும் பின் தங்கிய நிலையில் இயங்கிவருகிறது. அடிப்படை வசதிகளான ஆசிரியர்கள், தளபாடங்கள் கூட‌ போதியளவு இல்லாத நிலையில் இயங்கி வருகின்றது.

இங்கு கடமையாற்றிய கெளரவ அதிபர் A.T. றயிஸ்தீன் அவர்களை இடமாற்றம் செய்திருப்பது மரிச்சிக்கட்டி பாடசாலை மாணவர்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகமும் அநியாயமுமாகும்.

அதிபர் A.T. றயிஸ்தீன் அவர்கள் இப்பாடசாலையில் தனது கடமையை பொறுப்பேற்றதிலிருந்து இதன் வளர்ச்சிக்கு மிகவும் துணிந்து, தியாகித்து செய்லாற்றியவர். இந்த நிலையில் இவரை இடமாற்றம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியமாகும்.

தயவுசெய்து இதற்கு பொறுப்பான கல்வி அதிகாரிகள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்துமாறு இப்பாடசாலை மாணவர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்
.
Transferring a qualified principal from backward community school it's a unhealthy movement.

The concern departments and personals should take immediate action

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Post a Comment

0 Comments