Subscribe Us

மொஹமட் நிஷோஸின் ( கணக்குப் பரீட்சை ) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

எண்ணிக்கை
என்னென்று
எண்ணத்தில் இல்லையெனில்
n என்று எண்.

வட்டத்தின் பரப் π
திட்டமாய்க் காண
πயாரை ஆரையால்
பையப் பெருக்க
பெய்யெனப் பெய்யும் பரப்பு

கற்றது சுற்றளவு
இல்லாதது பரப்பளவு
ஒற்றைப் பக்கத்தை
மற்றப் பக்கத்தால்
எதிராகப் பெருக்க
சதுரமும் செவ்வகமும்
பரப்பு தானா வரும்
சிறப்பு புள்ளி வரும்.

எக்கஷ்ட கணக்கும்
எக்ஸாமில் வந்தால்
X போட்டு செய்தால்
அக்கஷ்டம் நீங்கலாம்

மெய்யாகத் தெரியாட்டி
ஐயையோ பதறாமல்
Y என்ற எழுத்தை
வை தெரியா இடத்தில்
ஐயா விடை காணலாம்.

எல்லாவற்றிலும்
ஈசியான வழியிருக்கு
நல்லாப் படிக்கிற
பிள்ளையின் பேப்பரை
மெல்லத் தலை நீட்டி
மெதுவாக கொப்பி பண்ண
அள்ளிப் புள்ளி வரும்
அள்ளிக் ஜெயிலிலும் போடலாம்.

Post a Comment

0 Comments