நேற்று தென்பகுதி கடற்பரப்பில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டது அறிந்ததே,
இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை மாலை இந்த போதைப் பொருளை மீட்டனர்.
சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டு, போதைப் பொருளுடன் 10 ஈரானியர்களும் ஒரு பாகிஸ்தான் பிரஜையும் கைது செய்யப்பட்ட நிலடில் அவற்றின் படங்கள் வெளியாகி உள்ளது.
மிகப் பெரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் ஹெரோயின் இலங்கையின் தெற் பகுதி கடலில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவது போல், படகுகள் மூலம் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதாக தெரியவந்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் ஊடாக கொழும்புக்கு கொண்டு வரப்படும் ஹெரோயின் கொழும்பில் வைத்து, பிரதான விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த ஹெரோயின் விற்பனையானது மிகப் பெரியளவில் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் சந்தை விலை ஒரு கோடி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.







0 Comments