சிறிலங்காவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்த தணிக்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டிலுள்ள அனைவரும் குருடனாக்கி “தெவ்மி” என்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்ததாக பிரச்சாரம் செய்தமை மற்றும் அந்த சம்பவத்தின் காரணமாக சமூக வளைத்தளங்கள் மீதான நம்பிக்கை தொடர்பில் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சமூக அறிவியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் இடம்பெற்ற நம்மையான சம்பவங்களை வெகு விரையில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு, சிறிலங்காவில் காணப்படும் சட்டத்திடங்களில் உள்ள இடைவெளியினால் இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குறித்த இளம் பெண் மற்றும் அது தொடர்பிலான சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறப்படும் இளைஞனர் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவமரியாதை காரணமாக எதுவும் விபரீதகங்கள் ஏற்பட்டிருந்தால், என்பது தொடர்பில் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் எந்தவொரு குப்பையான விடயத்தை பிரபல்யமைடைய செய்யும் ஊடகங்கள் வாயிலாக இந்த சம்பவம் தொடர்பில் பாரிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினுள் ஊடங்களின் பொறுப்பு தொடர்பில் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பிலான குறித்த இளம் பெண்ணின் உண்மையான பெயர் உறுதி செய்யப்படாத போதிலும் தற்போது தில்கி என்பதே அவருடைய பெயர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் அவதானத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை சிறிய விடயமாக எடுத்துகொள்ள முடியாதென அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 24 மணித்தியாளத்திற்கு சமூக வலைத்தளம் ஊடாக ஒரு நாட்டையே ஏமாற்றிய இந்த சம்பவம் சிறிலங்காவின் எதிர்கால தொழில்நுட்ப பயணத்திற்கு ஆபத்தான உதாரணத்தை வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான வேறு சம்பவங்களை மேற்கொண்டு நாட்டினுள் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களை தங்களின் அறிவிற்காக மாத்திரம் பயன்படுத்தினால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். அடையாள அட்டை பயன்படுத்தி சிம் அட்டைகளை பெற்றுகொள்வதனை போன்று முகப்புத்தக கணக்கையும் எதிர்காலத்தில் அவ்வாறு மேற்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஏமாற்று வேலைகளை மேற்கொள்ளாமல் அறிவை வளர்த்து கொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெவிமி என்ற யுவதி, இளைஞர் ஒரு ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தான் காதலித்த இளைஞர் அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனையடுத்து இந்த பெண் செய்து கொண்டுள்ளதாக அவரது நண்பர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் மரணம் தொடர்பில் தனது முகப்புத்தக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அத்துடன் மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் எனவும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை எனவும் குறித்த யுவதி உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.


0 Comments