பேஸ்புக் நிறுவனத்தின் நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர இலாபம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
கடந்த வருடம் இதே பகுதியில் அதன் நிகர இலாபம் 509 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.இது 196.66% வளர்ச்சியாகும்.
விளம்பரம் மூலமான வருவாய் அதிகரிப்பே இதற்கான பிரதான காரணமென
தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்தினை விட இது 57 % அதிகரிப்பென தெரியவந்துள்ளது.
மேலும், ஃபேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments