இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள் கடந்த 20 ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கு கொள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தகுதி பெற்ற 53 பேரில் 44 பேர் பங்குபற்றியிருந்தனர்.
8, 10, 12, 14, 16 மற்றும் 18 வயதுகளுக்கு கீழ் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக குறித்த போட்டிகள் நடைபெற்றன.
கிளிநொச்சியில் இருந்து முதல் தடவையாக தேசிய போட்டியில் சதுரங்க போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தினர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மாவட்ட மட்டத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு கட்டமாகவே குறித்த போட்டிகளில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொண்டவர்களில் மூன்று பேர் தரப்படுத்தல் பட்டியலில் இடம்பெறக்கூடிய செயற்திறனை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments