மே தினத்தில்
மோதினமாம்.
காலியில கூடுதற்கு
கட்சி தயாராக
காலியாகப் போனவரு
போலியாய் ஆள் சேர்த்து
கொழும்பில் கூடுகிறார்
எழும்ப நாடுகிறார்.
தோற்றதன் பின்னாலும்
தொற்ற அலைகின்றார்
ஈற்றிலே எதுவுமின்றி
இலவு காத்த கிளியாவார்
அங்கால எம்பிக்கள்
ஆளுக்காள் எம்பிப் பாய
இங்கால தும்பிக்கைக்கு
எழுகிறது நம்பிக்கை.
சிக்காக்கோ மறந்து போச்சு
சிக்குமா ஆட்சி என்று
கொக்காய் நிற்கிறார்கள்
கூடிய பலம் பெறுவதற்கு .
எளியோர் உழைப்பவற்றை
எப்போதும் சுரண்டி வாழ்வோர்
தொழிலாளர் தினத்தினையும்
தொலைப்பது முறையாகுமா?
0 Comments