Subscribe Us

header ads

குர்ஆனை ஒரு வருடமாக ஆராய்ந்து படித்த பிறகு இஸ்லாத்தில் இணைய முடிவு - லின்ட்சே லோஹான்.


குர்ஆனை ஒரு வருடமாக ஆராய்ந்து படித்த பிறகு  இஸ்லாத்தில் இணையும் முடிவை எடுத்திருக்கிறார்  அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான 
லின்ட்சே லோஹான்.

அவர் 2015 ஆம் ஆண்டிலிருந்து குர்ஆனை படிக்க தொடங்கியுள்ளார்.

குர்ஆனை படிக்க படிக்க குர்ஆன் அவரை முழுமையாக ஈர்த்துள்ளது. 

தற்போது அவர் திருக்குர்ஆனை படித்து முடித்து விட்டதாகவும், அவர் முழுமையாக இஸ்லாத்தின் பால் கவரப்பட்டுவிட்டதாகவும் இன்னும் சில தினங்களில் அவர் இஸ்லாத்தில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் கூறுகிறது.

பிரபல நடிகையான இவர் இஸ்லாத்தை ஏற்பது அமெரிக்க மக்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது. இவர் மட்டுமில்லாமல் கேட் ஸ்டீவன்ஸ், கேசியஸ் கிளே, மைக்கேல் ஜாக்சன் போன்ற அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்ற பல்வேறு பிரபலங்களின் வரிசையில் லின்ட்சே லோஹானின் பெயரும் இடம் பெறுகிறது.

இறைவன் இவருக்கு பரிபூரண ஹிதாயத் வழங்க பிரார்த்தனை செய்வோமாக...




Post a Comment

0 Comments