Subscribe Us

header ads

யா அல்லாஹ் என் வாழ்க்கையிலும், இதனைப்போல பறக்கத் செய்திடுவாயாக (உண்மைச் சம்பவம்)



அன்று விடுமுறை நாள் என்பதால், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன்.


சமையல் அறையில் தான் உணவு உண்ணும் மேசையும் இருந்தது.


சாப்பிட அமர்ந்த போது சமையல் அறையில் உள்ள கப்பட்களில் இரண்டு இடங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், நான் எனது கனவனுக்காகவும், பிள்ளைகளுக்காயும் சமைக்கிறேன்என்ற ஒரு வாசகம் கானப்பட்டது.


இதைப் பார்த்து என் நண்பனிடம் என்ன இது எனக் கேட்க அவன் சொன்ன பதில்,


இது என் மனைவியின் வேலை எனக்கும் எம் பிள்ளைகளினதும் பசியை ஆற்ற தான் சமைப்பதை ஒரு இபாதாத் ஆக நினைத்து செய்கிறாள். அதே போல் உண்ணும் உணவினைக் கொண்டு வரக் கூடிய எந்த நோய்களும் எமக்கு வந்து விடக் கூடாது எனும் பிரார்த்தனையுடன் பிஸ்மில் சொல்லி தான் தினமும் சமைக்க ஆரம்பிப்பாள்,


இந்த வாசகத்தினை ஒட்டி வைத்தால் அவளுக்கு துஆ செய்வது மறக்காது என்றும் வீடு வரும் உறவினர்கள் நன்பர்கள் போன்றவர்கள் இது என்ன என்று நிச்சயம் கேட்பார்கள் அவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுக்கலாம் எனும் நோக்கில் ஒட்டி வைத்து உள்ளால், அவளின் ஆசைப்படி இன்று உனக்கும் சொல்லியாச்சு என்று நண்பன் சொல்லி முடிக்கும் போது. இறைவா என் வாழ்க்கையிலும் இதனைப் போல் பரக்கத் செய்து விடுவாயாக இந்த சகோதரிக்கும், இவள் குடும்பத்திற்கும் பரக்கத் செய்திடுவாயாக என்று எனக்குள் துஆ செய்து கொண்டேன்


நன்றி : பர்ஹான் முஹம்மட்

Post a Comment

0 Comments