Subscribe Us

header ads

மே 1 - உழைப்பாளர்கள் அனைவருக்கும் வேதனை கலந்த வாழ்த்துக்கள்


1886 ம் ஆண்டு சிக்காக்கோ நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் , அதுவும் ஒரு நாளைக்கு 15 மணித்தியாலத்திற்கும் அதிகம் பணி புரிய வேண்டும் என்று இருந்த சட்டத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த அந்த மக்கள் சில உயிர்களை பலி கொடுத்து அதை எட்டு மணி நேர வேலையாக மாற்றிக்கொண்டனர்.

அதிலிருந்து தான் இந்த தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே வரலாறு.

ஆனால் , இந்த வரலாறுகள் மறைக்கப்பட்டு , மழுங்கடிக்கப்பட்டு இன்று அது பிரயாணம் போகும் நிகழ்வாகவும் , சாராய போத்தலுக்கும் சாப்பாட்டு பார்சலுக்கும் ஏமாந்து போன ஒன்றாகவும் , சல்லிக்கு விற்கப்படும் ஒன்றாகவும் , தங்களது கட்சிகளின் நலன்களை முன்னிறுத்திய ஒரு செயல்பாடாகவும் மாறியுள்ளது.

நமது நகரில் கூட இந்த அவலத்தை நாம் காண்கிறோம்.இப்படி தங்களின் கட்சிகளுக்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை நபர்கள் உண்மையான உழைக்கும் வர்க்கத்திற்கு சார்பாய் குரல் கொடுக்க போகிறார்கள் எனும் கேள்வி ஒன்று நமக்குள் எழுகிறது.

*18 வயதிற்கு குறைந்த எத்தனையோ சிறுவர்கள் இன்று வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

*எட்டு மணி நேர வேலை என்பது இன்று 12 மணி வரை தொடர்கிறது

*கிழமைக்கு ஒரு நாள் விடுமுறை என்கிற சாப்பு சட்டங்கள் களவாடப்பட்டுள்ளது.

*மேலதிக நேர கொடுப்பனவுகள் சுரண்டப்பட்டு இருக்கிறது (Over Time).

*விபத்து , நோய்கள் என்பவைகளுக்கு காப்புறுதிகள் கிடையாது

*வருடாந்த போனஸ் கிடையாது.

*வருடாந்த சம்பள அதிகரிப்பு இல்லை ..

*ஊழியர் சேமலாப கொடுப்பனவு கட்டபடுவதில்லை(ETF).

இப்படியாக பல வழியில் தொழிலார்கள் நமது நகருக்குள்ளும் , அதற்கு வெளியே முழு நாட்டிலும் அவலப்படும் போது பெயரளவில் இந்த மே தின கொண்டாட்டங்கள் இருந்தால் என்ன ? தொலைந்தால் என்ன ?எனும் கேள்வி உள்ளது.

இந்த அவலப்படும் தொழிலார்கள் விடயத்தில் நமது அரசியல்வாதிகள் எத்தனை தடவை குரல் கொடுத்து இருப்பார்கள். முதலாளி வர்க்கத்தை பகைத்தால் நமக்கு அடுத்த தேர்தலில் ஆபத்து என்கிற விடயத்தை அவர்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.

கூடவே இன்னும் ஒன்றையும் அறிந்து வைத்துள்ளார்கள். அது தான் தொழிலாளர் வர்க்கம் நாங்கள் சொல்வதை கேட்கும் தலையாட்டி பொம்மைகள் என்று.

தொழிலாளர்கள் இவ்வாறு இருக்கும் வரை தோல்வியே கிடையாது முதலாளிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும்.

அனைவருக்கும் வேதனைமிக்க உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

-Mohamed Infaas-

Post a Comment

0 Comments