மேற்கிந்திய தீவுகள் அணி அண்மையில் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை வென்றது.
அவ் அணியை தலமை தாங்கியவர் டெரன் சமி.
இந்நிலையில் , அவரின் சொந்த இடமான சென்.லூசியாவில் கிரிக்கெட் மைதானமொன்றுக்கு டெரன் சமியின் பெயர் சூட்டப்படவுள்ளது.
அங்கு அமைந்துள்ள பியோஸ்ஜோர் என்ற பிரதான மைதானத்துக்கே சமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
'டெரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம்' என அது பெயரிடப்படவுள்ளது. அதுபோல் இம்முறை மேற்கிந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்றுமொரு வீரரும், சென். லூசியாவைச் சேர்ந்தவருமான ஜொன்சன் சார்லஸின் பெயர் அம்மைதானத்தில் உள்ள பார்வையாளர் அரங்கொன்றுக்கு சூடப்படவுள்ளது.
சென்.லூசியாவின் பிரதமரே இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேற்கிந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் இது அவருக்கு கிடைத்த மிகப் பெரும் கௌரவமாக கருதப்படுகின்றது.
இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு , இருபதுக்கு 20 தொடர் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை பிரித்தெடுக்கும் படி அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்த து.
அதுபோல், ஐ.பி.எல் தொடரின் பின்னர் அவ்வணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
நடக்கும் விடயங்கள் அனைத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.


0 Comments