Subscribe Us

header ads

'முகம்மது நபி' பற்றிய கேலிச் சித்திரத்தை பிரசுரித்த பத்திரிக்கையாளர்களுக்கு சிறை தண்டனை..


'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கையில் வெளியான, முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்த 2 பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Cumhuriyet daily என்ற துருக்கிய பத்திரிக்கையில் கட்டுரையாளர்களாக பணிபுரிந்து வரும், Ceyda Karan and Hikmet Cetinkaya இருவரும் கடந்த வருடம் எழுதிய கட்டுரை ஒன்றில், பிரான்ஸின் 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கையில் வெளியான, முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை மறு பிரசுரம் செய்துள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, துருக்கி காவற்துறை அந்த பத்திரிக்கையின் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த பிரதிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்கள் பலர் அந்த கேலிச் சித்திரத்தை பிரசுரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பத்திரிக்கை பிரதிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

பத்திரிக்கை வழியாக மக்கள் மத்தியில் வெறுப்பையும் பகையும் வளர்ப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தனித்தனியே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments